தொகையறா
சங்கத்தமிழ் கண்டத் தமிழனை
பொங்கும்கடல் கொண்டப் பொழுதினில்
வந்துக்கரம் தந்தத் தலைமகன்
….........................வடிவேலன்!
எங்கும்தமிழ்ச் சங்கம் பரவிட
எங்கள்குலம் எங்கும் உலவிட
குன்றில்உயர் குன்றில் உறைபவன்
..........................கதிர்காமன்!
பண்டைத்தமிழ் பண்ணில் இசைந்திட
அண்டைக்குலம் எல்லாம் அசந்திட
இன்றைக்கருள் செய்யக் குமரனைத்
............. .......தொழுவோமே!
கொச்சைத்தமிழ் எங்கும் களைந்திட
இச்சைக்குணம் இல்லா தொழிந்திட
அச்சன்குரு அன்புச் சரவணன்
....................அருள்வோனே!
....................அருள்வோனே!
............,.......அருள்வா..னே!
பல்லவி
ஆண்டாண்டு காலமாக ஆளுகின்ற சாமி... ஆளுகின்ற சாமி..
ஆலயத்தைத் தேடிவாறோம் ஆதரவா வாநீ...ஆதரவா வாநீ...
நல்லூரில் நாயகனா வாழுமெங்க சாமி....எங்ககந்த சாமி..
நாதியற்ற நம்மசனம் வாழவழி காமி
....வாழிவழி காமி..
கந்தனுக்கு அரோகரோ
முருகனுக்கு அரோகரோ
வேலனுக்கு அரோகரா
அழகனுக்கு அரோகரோ
வேல்முருகா வெற்றி வேல்முருகா ஓம்
வேல்முருகா வீர வேல்முருகா
சரணம் 1
கோடிநெஞ்சில் குடிகொண்ட
......... எங்கள் சண்முகா
நாடிவந்தோர் குறைதீர்க்கும்
...........ஆதி நாயகா
வேண்டிடுவோர் பிணிநீக்கும்
...........எங்கள் வேலவா
மீண்டிடவோர் வரம்வேண்டும்
..........ஞான பண்டிதா
ஞாலமெல்லாம் அருள்செய்யும்
...........எங்கள் குருபரா
ஞானமில்லார் மனம்மாற்றும்
..........ஞால பாலகா
காலமெல்லாம் புகழ்ஓங்கும்
..........சூர வேலவா
ஆசையில்லா நிலையின்றி
..........எம்மைக் காக்கவா
(வேல்முருகா...)
சரணம் 2
பழனியில் ஆண்டியான பாலகனே!
செந்தூரில் வென்றகிரு பாகரனே!
பரங்குன்றில் தெய்வயானை கொண்டவனே!
குருவாகி சுவாமிமலை நின்றவனே!
திருத்தணியில் வள்ளியினை ஏற்றவனே!
பழமுதிர்ச் சோலைவாழும் ஆண்டவனே!
எங்கள் நல்லூரை ஆளுகின்ற வேலவனே...
உங்கள் நல்லாசி வேண்டுகின்றோம் ஆண்டவனே...
(வேல்முருகா...)
அரோகரா... அரோகரா.... அரோகரா
செ. இராசா
No comments:
Post a Comment