வினைகளைக் களையவே
.......விளைந்தவர்* மீண்டும் 
வினைகளுள் சுழல்வது 
.......வினைவலி அன்றோ?
வினைவலி குறையவே 
.......விழைபவர்* கூட
வினைகளைப் பெருக்கியே
.......விழுகிறார் அன்றோ?!
வினைகளை ஒதுக்கிட 
......முடிவதும் இல்லை!
வினைவலி தடுத்திட 
.......முயல்வதும் இல்லை!
வினைவழி கடக்கையில்
......விளைந்திடும் தொல்லை
வினைவிதி புரிந்தவர் 
......வினைகளில் இல்லை!
செ. இராசா
*விளைந்தவர்- பிறந்தவர்
*விழைபவர்- விரும்பியவ

No comments:
Post a Comment