27/05/2024

மெட்டு: கந்தன் இருக்கும் இடம்----இயக்குநர் திரு. பேரரசு

 


(இன்றைய தினம் இயக்குநர் திரு. பேரரசு அவர்களுடன் நடந்த ஒரு பேட்டியில் நம் நண்பர் மற்றும் திரைப்படப் பாடகர் திரு. இன்பக்கலில் அவர்களின் இனிய குரலில் அடியேனின் வரிகளில் திடீரென்று ஒரு பாடல் ஏற்றி பாடப்பட்டது)

பல்லவி
அண்ணன் எடுத்தபடம் செம்ம ஓட்டம்
அது போலமைஞ்சா சேருமுங்க நல்ல கூட்டம்....(2)

அண்ணன் தந்த பாட்டுயெல்லாம்
செம்ம ஹிட்டுங்க...அது
தலதளபதி இரண்டுபேர்க்கும்
செம்ம பிட்டுங்க...

(இப்பவுந்தான் எடுக்குறாங்க கழுதையாட்டம்- அட
மனசுக்குள்ள உண்மையில
ஒருவித வாட்டம்)

அப்பா சாமி....நீ கொஞ்சம் வாநீ
அண்ணன்போல காமி...இல்லையினா போநீ...
 

சரணம்
செண்டிமண்டு ஆக்க்ஷன்
படம் திருப்பாச்சி பாரு
அடுத்தபடம் சிவகாசி
அதுக்கு ஈடு ஏது?!

தளபதிக்கு இரண்டுதந்து
தலைக்கும் செஞ்சார் ஒன்னு
திருப்பதியத் தேடிப்பாரு
திருப்பவரும் கண்ணு

தர்மபுரி படம் கொடுத்த
தங்கமான மனுசன்டா
பழனி படம் கொடுத்த
பத்தரமாத்துத் தங்கம்டா
திருத்தணி படம் கொடுத்த
தெய்வம்போல மனசுடா
திருவண்ணாமலை எடுத்த
அண்ணன் நம்ம உறவுடா

சீமைப் பிள்ளைடா
சிவகங்கை சீமைப் புள்ளடா
டஃப் கொடுக்கத்தான்
இவன் பொறந்திருக்கான்டா
நேர்மையாக பேட்டிதரும்
இவரைப் போல ஆளிருக்கா
நைனா சொல்லு நைனா

✍️செ.‌இராசா

No comments: