19/08/2026

மாண்புமிகு மனிதநேயம் MKP

 



கடந்த சனிக்கிழமை (15.08.2026) அன்று அதிகாலையில், தம்பி தினேஷ் வீட்டின் உள்நுழைந்தபோது, அங்குள்ள ஒரு இளம் தம்பதியினர் வீட்டின் வெளியே ஏதோ ஒரு புரியாத குழப்பத்துடன் பதற்றமாகக் காணப்பட்டனர். என்னவென்று விசாரிப்பதற்கு முன்பாகவே, என்னைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் தம்பி தினேஷ் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினர். காரணம் விசாரித்தபோது, தங்கள் ஊரைச் சேர்ந்த உறவினரான 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கத்திலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும், அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் கூறினர். "பதட்டப்பட வேண்டாம்... முதலில் அமைதியாக இருங்க... பார்த்துக்கலாம்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.
இதற்கான நடைமுறைகளை விளக்கி, சரியான முறையில் வழிநடத்தக்கூடிய ஒரு அமைப்பு உள்ளதைச் சொல்லி, 'மனிதநேய கலாச்சாரப் பேரவை' நண்பர் திரு. ஹுசைன் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் மட்டும் அனுப்பினேன். சனிக்கிழமை காலை நேரம் என்பதால் நேரடியாக அழைக்கத் தயங்கினேன். ஆனால், தகவல் பார்த்த உடனேயே அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். "கைப்பேசிஎண் கொடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உடனடியாக ஆறுதலாகக் கூறினார்கள். நானும் கைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, முதல் கட்ட காவல்துறை மற்றும் மருத்துவ நடைமுறைகள் முடிக்கக் கால தாமதமாகும் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால், ஐயா அவர்களும் அந்த அமைப்பும் உடனடியாக ஒரு புலனக்குழுவை (WhatsApp Group) அமைத்து, ஊரில் உள்ள முக்கியமான நபர்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரையும் இணைத்து அனைத்து நடைமுறைச் சிக்கல்களையும் சரிசெய்தனர். இதோ, இன்று (19.08.2026) புதன்கிழமை, இறந்தவரின் உடலை ஊருக்கு அனுப்பி வைக்க வண்டியும் வந்துவிட்டது.

இவர்கள் இப்படிச் செய்வது முதல் முறையல்ல. வெளியே தெரியாமலும், எந்த விளம்பரமும் இல்லாமலும் தொடர்ந்து இதுபோன்ற பல சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
இறந்தவரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் ஈடுசெய்ய முடியாவிட்டாலும், அவர்களின் உடலை உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் இந்த நல்ல காரியத்தைச் செய்த 'மாண்புமிகு #மனிதநேய #கலாச்சாரப்_பேரவை'யின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, நன்றி!
MKP & ஹுசைன் சார்.

✍️ நன்றியுடன்,

செ. இராசமாணிக்கம்

#அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், இராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்த எட்வின் அவர்கள், கடந்த 15ஆம் தேதி கத்தாரில் காலமானார். அவரது உடல் இன்று தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறது.

🤲 எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு நற்பேற்றை வழங்குவானாக.

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) – கத்தார்
Indian Community Benevolent Forum (ICBF) – Qatar-ன் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு 

No comments: