25/08/2026

தெய்வமுன்னைப் பற்றுகின்ற

 


தெய்வமுன்னைப் பற்றுகின்ற
.......பாவிநெஞ்சம் வீழுமோ?!
செய்வமென்று சோர்ந்திடாமல்
.......செய்யமேலும் தோன்றுமோ?!

பொய்யையெண்ணிப் போற்றுகின்ற
......பொய்மையென்ன வாழுமோ?!
மெய்யிலூறி மாறிடாத
....மேன்மையெண்ணிப் போற்றுமோ?!

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய (2)

✍️செ. இராசா

No comments: