உனக்கென்னப்பா நீ வெளிநாட்டுல இருக்க...
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில
சனம் எங்கள வேறமாரி பார்க்குது? ஆமாம்.
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில..
சனம் ஏங்க வேறமாரி பார்க்குது?
சொந்த பந்தம் எல்லாம் விட்டு
சொந்த ஊர விட்டுப்புட்டு
கடன அடைக்கக் கடலுதாண்டி வருகுறோம்- வந்து
வட்டியக் கட்டும் வாழ்க்கையில முழுகுறோம்!
வருஷம்பூரா கஷ்டப் பட்டு
போகும்போது இஷ்டப்பட்டு
நகைய நட்ட சேர்த்த காசில் வாங்குறோம்- வாங்கி
வந்தது முடிஞ்சா அடகுக் கடைக்கி ஓடுறோம்...
ஏய் மச்சான் கொஞ்சம் நில்லு
எங்க...இப்ப நீயும் சொல்லு?
எந்த வாழ்க்கை சொர்க்கம்?!- அது
நினைக்கும்போதே இனிக்கும்
எங்க வாழ்க்கை கஷ்டம்?! - அது
எங்களோட இருக்கும்...
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில
சனம் எங்கள வேறமாரி பார்க்குது? ஆமாம்.
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில..
சனம் ஏங்க வேறமாரி பார்க்குது?
வயசுபூரா தொலைஞ்சிபோச்சு
மசுருபூரா கொட்டிப்போச்சு
போதும் இனிமே போகனும் தான் நினைக்கிறோம்- ஆனால்
போனபின்னே வழியில்லாம திரும்புறோம்!
நினைச்சவேலை கிடைச்சிடாது
கிடைச்சவேலை நிலைச்சிடாது
அப்படி இப்படி சமாளிச்சே கடக்குறோம்- எல்லாம்
உறவுக்காக மெழுகுவர்த்தியா உருகுறோம்!
ஏய் மச்சான் கொஞ்சம் நில்லு
எங்க...இப்ப நீயும் சொல்லு?
எந்த வாழ்க்கை சொர்க்கம்?!- அது
நினைக்கும்போதே இனிக்கும்
எங்க வாழ்க்கை கஷ்டம்?! - அது
எங்களோட இருக்கும்...

No comments:
Post a Comment