பாசத்துல மழையைப்போல
கோபத்துல வெயிலைப்போல
வேகத்துல புயலைப்போல
ஆபத்துல கர்ணன்போல
அப்படியே மாறுவதில்
அவளைப்போல யாருமில்லை(2)
ஏ....காரைக்குடிக்காரி-ஏன்
முறைக்கிற ஒருமாரி (2)
அப்பல்லாம் சண்டை போட்டா
.....சட்டி முட்டி பறபறக்கும்
அப்பப்ப குத்திக்காட்டி
......பூகம்பமாய் வெடி வெடிக்கும்
இப்பவும் சண்டை போட்டா
....போனுக்குள்ள பொறிபறக்கும்
ஆனாலும் பேசலைன்னா
....இருதயமே பதைபதைக்கும்...
அவ
பேசும் அந்த பேச்சு- என்
உசுரில் கலந்து போச்சு
ஓடும் அந்த மூச்சு- நான்
எழுதும் கவிதை ஆச்சு...
ஏ....காரைக்குடிக்காரி-ஏன்
முறைக்கிற ஒருமாரி (2)
கட்டிக்கிட்ட புருஷன்பத்தி
....கண்டபடி கதைகதைச்சா
கண்ணகிபோல் மாறிடுவா
...கண்ணாலேயேப் பொசுக்கிடுவா
அண்ணனென்ன தம்பியென்ன
....சொந்தமென்ன பந்தமென்ன
உள்ளவச்சு பேசமாட்டா
...உண்மையைத்தான் பேசிடுவா
அவ
பேசும் அந்த பேச்சு- என்
உசுரில் கலந்து போச்சு
ஓடும் அந்த மூச்சு- நான்
எழுதும் கவிதை ஆச்சு...
ஏ....காரைக்குடிக்காரி-ஏன்
முறைக்கிற ஒருமாரி (2)
No comments:
Post a Comment