தலையில் கொட்டும் ரோமங்கள்
மெல்லக் கொட்டிச் சொல்கின்றன...
இன்னுமேன் காத்திருக்கிறாய் என்று!
ஊரார் வாயெல்லாம்
ஒன்றையே உரைக்கின்றன...
இன்னுமேன் தாமதிக்கிறாய் என்று?!
ஒவ்வொரு நிராகரிப்பிலும்
ஒவ்வொரு பரிகாசத்திலும்
கணக்காய் வந்து போகின்றன
இந்த வயதைக் கூட்டும் வருடங்கள்...
பாவம் அவனென்ன செய்வான்?
மௌனமாய் வலி சுமக்கிறது
காலம்!
No comments:
Post a Comment