ஆரம்பம் அதிரடியாய் இருந்தாலும்
சமீபத்திய சம்பவங்கள்
சங்கடத்தையேத் தருகின்றன...
மாற்று அரசியலுக்காய்
தூற்றும் அரசியலைத்
தூர வைத்தோம்...
துதி பாடியே
தொப்பை வளர்த்தோரை
வீட்டுக்கு அனுப்பினோம்...
கலப்படம் கூடாதென்று
அரசியலையும் ஆன்மீகத்தையும்
தனித்து வைத்தோம்...
ஆனால்...
வில்சன் போன்றோரின்
வில்லதனமான ஆக்ரோஷமும்
விஷமத்தனமான பேச்சும்
இரசிக்க முடியவில்லை....
உண்மையில்
பலரும் கலக்குகிறார்கள்
சிலர்தான் அச்சுறுத்துகிறார்கள்...
மீண்டும் அந்த...
ஒன்றிய அரசென்ற சொல்லாடல்தான்
ஒன்றை யோசிக்க வைக்கிறது?!
மாண்புமிகு முதல்வரே
அவைக் குறிப்பிலிருந்து மட்டுமல்ல
அவையிலுருந்தே ஒதுக்கி வைப்பீர்...
அதிகப் பிரசங்கிகளை
அதிகப் பிரசங்கங்களை....
செ. இராசா

No comments:
Post a Comment