நேரமில்லை நேரமில்லை
நேரமில்லை என்கிறீர்
......தூரமிங்கே போனதெங்கே
......சேர்த்தநேரம் இல்லையோ?!
யாருமென்னைப் பார்ப்பதில்லை என்னவாழ்க்கை என்கிறீர்
.......நீருமிங்கே போனதெங்கே
.......பார்க்கநேரம் இல்லையோ?!
காரமில்லை உப்புமில்லை
என்றுவம்பு செய்கிறீர்
.......காதலோடு பேசமட்டும்
.......கொஞ்சநேரம் இல்லையோ?!
தீரவில்லை ஆசையென்றுத் தேடியெங்கும் போகிறீர்
......தீர்க்கமான இன்பமெங்கே
......தேடநேரம் இல்லையோ?!
No comments:
Post a Comment