https://www.youtube.com/watch?v=_UMJIQ19yYw
பெண்:
*******
கண்ணாலம் கட்டுறேன்னு
சொன்னாக்கப் போதுமா
அன்பான ஆசை மச்சான்
காசு பணம் வேணாமா?
ஆண்:
******
மச்சுவீடு இல்லாட்டியும்
குச்சுவீடு இருக்குதடி...
மானே மரிக்கொழுந்தே
காசு பணம் ஏதுக்கடி?
பெண்:
******
ஐயோ மச்சான்.... ஆசை மச்சான்
அதுக்காக சொல்லலீங்க...
பள்ளிக்கூடச் செலவுக்குத்தான்
பணம் காசு வேணுமுங்க...
ஆண்:
******
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிற
அஞ்சுகமே ரத்தினமே
பிஞ்சாக நான் நினைச்சேன்- நீ
பிஞ்சு இல்லை ஒத்துக்குறேன்...
பெண்:
******
என்னை மாமா பண்ணுறது
சொல்லு மாமா... ஆசை மாமா
கண்ணாலம் கட்டனும்னா
காசோட வாங்க மாமா...
ஆண்:
******
அத்தை பெத்த பைங்கிளியே
ஆசையான பூங்கொடியே....
சீமைக்கு போயிவந்து
சீக்கிரமா திரும்பி வாரேன்...
பெண்
******
ஆசைமாமா அருமை மாமா
அன்பான மீசை மாமா
சில்லறைய சேத்துக்கிட்டு
சீக்கிரமா வாங்க மாமா
சீக்கிரம் வாங்க மாமா
✍️செ. இராசா
(கிராமியக் குயில்களுக்கு அன்புடன் சமர்ப்பணம்)
******
மச்சுவீடு இல்லாட்டியும்
குச்சுவீடு இருக்குதடி...
மானே மரிக்கொழுந்தே
காசு பணம் ஏதுக்கடி?
பெண்:
******
ஐயோ மச்சான்.... ஆசை மச்சான்
அதுக்காக சொல்லலீங்க...
பள்ளிக்கூடச் செலவுக்குத்தான்
பணம் காசு வேணுமுங்க...
ஆண்:
******
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிற
அஞ்சுகமே ரத்தினமே
பிஞ்சாக நான் நினைச்சேன்- நீ
பிஞ்சு இல்லை ஒத்துக்குறேன்...
பெண்:
******
என்னை மாமா பண்ணுறது
சொல்லு மாமா... ஆசை மாமா
கண்ணாலம் கட்டனும்னா
காசோட வாங்க மாமா...
ஆண்:
******
அத்தை பெத்த பைங்கிளியே
ஆசையான பூங்கொடியே....
சீமைக்கு போயிவந்து
சீக்கிரமா திரும்பி வாரேன்...
பெண்
******
ஆசைமாமா அருமை மாமா
அன்பான மீசை மாமா
சில்லறைய சேத்துக்கிட்டு
சீக்கிரமா வாங்க மாமா
சீக்கிரம் வாங்க மாமா
✍️செ. இராசா
(கிராமியக் குயில்களுக்கு அன்புடன் சமர்ப்பணம்)
No comments:
Post a Comment