08/06/2018

காலா- விமர்சனம்


பேசினாலும் பாவமென்று
பேசாமல் நானிருந்தேன்...
பேசாமல் போனாலோ
பெரும்பாவம் அதுவென்றே
பேசிடப் போகின்றேன்...

“காலா”

காலா என்றால் கருப்பு
களமோ இங்கே சிவப்பு

“நிலம் எங்கள் உரிமை” என
நின்று போராடுபர் காலா

இனி...

அடக்கத் துடிக்கிறது அதிகாரம்
அடங்க மறுக்கிறது காலாயிசம்

அமைதிப் போராட்டத்தில் வன்முறை
அதற்குக் காரணம் அதிகாரம்

அடுத்த நகர்வு அடக்குமுறை
அதற்கும் காரணம் அதிகாரம்

அடக்குமுறையில் துப்பாக்கிச் சூடு
அனைத்திற்கும் காரணம் அதிகாரம்

ஊடக உதவியோடு உண்மை வெளிவர
உரிமைப் போராட்டம் வெல்கிறது

ஆதிக்கம் அடிபணிகிறது
அதற்காக சில உயிர்கள் பலியாகிறது

இது...தான் கதை

இங்கே காலா.....
உரிமைக்குப் போராடும் உத்தமர்...
உரிமைக்காக உறவுகளை இழந்தவர்..
உரிமைக்காக உயிரையும் தரத்துணிபவர்..

உறவுகளே...

இந்த காலா...
திரையில் மட்டும் போராடும் காலா

இந்த காலா...
சமூக விரோதிகளை
சரியாக அடையாளம் கண்ட காலா

இந்த காலா...
அதிகார வர்க்கத்தை
ஆட்டுவித்த காலா.....

இந்த காலா....
காலாவதியான காலா...

✍️செ. இராசா

குறிப்பு:
*******
இந்தப் படத்தை சத்தியமாக நான் திரையில் பார்க்கவில்லை.

No comments: