ஏதேதோ கிறுக்கினேன்
ஆகா...அருமை....என்றீர்கள்
எழுத்தில் மெருகை ஏற்றினேன்
எங்கே நீங்கள் சென்றீர்கள்?
நானாக எண்ணிவிட்டேன்
நானும் ஒரு கவிஞனென்று..
நூல்கூட கோர்த்துவிட்டேன்
நானும் ஏதோ கவிஞனென்று...
முகநூலைப் புரிந்துகொண்டேன்
மதுபோன்ற போதையென்று...
இப்போது விழித்துக்கொண்டேன்
இதுவும் கடந்து போகுமென்று..
-அனைவருக்கும் நன்றி-
No comments:
Post a Comment