03/06/2018

அது ஒரு கனாக்காலம்---108வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)



108வது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: மூன்றாமிடம்
நடுவர்: திரு. கோபிநாதன் அவர்கள்
அமைப்பு: தமிழ்ப்பட்டறை (8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

அது ஒரு கனாக்காலம்
*********************
கருப்பு வெள்ளை தொலைக்காட்சி- அது
ஒரு கனாக்காலக் கலைக்காட்சி!
விருப்பு மிகுந்த அலைக்காட்சி- அது
ஒரு வியக்கவைத்த பொருட்காட்சி!

ஒளியும் ஒலியும் வரும்காட்சி- அது
ஒரு களிப்பான விழாக்காட்சி!
வாரம்தோறும் படக்காட்சி- அது
ஒரு வசந்தமான நிழல்காட்சி!

பட்டிமன்றம் கலைநிகழ்ச்சி- அது
கட்டிப்போட்ட பெரும் நிகழ்ச்சி!
சிரிக்க வைத்த கலைநிகழ்ச்சி- அது
சிறப்புநாளில் வரும் நிகழ்ச்சி!

தடங்கலுக்கு வருந்தும் செய்தி- அது
தடையில்லாமல் வந்த செய்தி!
தினந்தோறும் சொல்லும் செய்தி- அது
உண்மையிலே உண்மைச் செய்தி!

குறைவான நிகழ்ச்சி இருந்தும்- அன்று
குறையவில்லை மனம் மகிழ்ச்சி!
அதிகமான நிகழ்ச்சி இருந்தும்- இன்று
ஆகவில்லை அகம் நெகிழ்ச்சி!

✍️செ. இராசா

https://www.facebook.com/photo.php?fbid=1625183050884937&set=pcb.2042982336020672&type=3&theater&ifg=1 

No comments: