14/06/2018

இனிது இனிது தனிமை இனிது



அரசியல் வாழ்க்கையிலே
அத்துவிடப்பட்ட அநாதையாய்...

விளையாடும் அரங்கத்திலே
விளையாட்டின் சுவடறியா பார்வையாளனாய்...

தெரிந்த கூட்டத்திலே
தெரியாத ஒருவனாய்...

நிர்வாண உணர்வோடு
நிர்க்கதியில் நிற்பவனாய்..

நான் மட்டும் தனியாய்....

இது காலத்தின் கோலமா?!
இல்லை ஞாலத்தின் ஞானமா?!

ஒருமையில் தனித்திருந்தால்
தனிமை பிரபஞ்சத்தை இணைக்கும்

பன்மையில் தனித்திருந்தால்
தனிமை உறவுகளை விலக்கும்...

ஆனால்...

பிரபஞ்சமே உறவாய்ப் பார்த்தால்
உறவுகளும் பிரபஞ்சத்தில் அடக்கமே

ஆம்...

தனிமை உன்னை அறியச்செய்யும்
தனிமை உலகை அறியச்செய்யும்

தனித்திரு...இணைத்திரு.. இணைந்திரு
இனிது இனிது தனிமை இனிது

✍️செ. இராசா

No comments: