ஊரென்ன சொன்னாலும்
.....உலகென்ன சொன்னாலும்
.....உண்மையை மாற்ற முடியுமா?
யாரென்ன செய்தாலும்
......இனியென்ன தந்தாலும்
.......ஈன்றதை மறுக்க முடியுமா?!
நீரென்ன வைதாலும்
.......நிகரில்லை என்றாலும்
.......நேர்வதைத் தடுக்க முடியுமா?
பாரெங்கு போனாலும்
.......பலகோவில் சென்றாலும்
.......பாவிகள் மீள முடியுமா?

No comments:
Post a Comment