24/05/2026

போனதெல்லாம் போனதென்று

 

போன தெல்லாம் போன தென்று
....போக்கை மாற்றி வந்திடு!
ஆன தென்ன ஆவ தென்ன
....ஆழ்ந்து நோக்கிக் கற்றிடு!
ஞான மென்ன மூட மென்ன
.....மாறு பாட்டைக் கண்டிடு!
வான மென்ன பூமி யென்ன
.... வைய யெல்லாம் வென்றிடு!
✍️செ. இராசா

No comments: