10/05/2026

சொல்வதென்ன செய்வதென்ன?

 


சொல்வ தென்ன செய்வ தென்ன?
....சுட்டும் அந்த* உள்ளமே;
சொல்லை மாற்றிச் செய்தி டாத
....சுத்தம் சொல்லில் வேண்டுமே!
அல்ல லில்லா செய்கை செய்ய
.... அல்லல் தூரப் போகுமே!
நல்ல செய்கை செய்ய செய்ய
.....நன்மை கோடிப் பாயுமே!
#அந்த என்றால் அந்த/ அறுந்த போன/ இறுதி என பலபொருள்கள் வரும். அனைத்தும் இங்கே பொருந்தும்.
✍️செ. இராசா

No comments: