புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
27/05/2026
அறிய அறிய அறிவதென்ன
அறிய அறிய அறிவ தென்ன
....அறிந்த தொன்றும் இல்லையே!
அறிந்த தாக உணர்வ தெல்லாம்
....அறிவி லாதோர் செய்கையே!
அறிவின் ஆழம் அகலம் தேடி
....அறிய முயலும் எண்ணமே
அறிவைக் கூட்டி அமைதி யாக்கி
....அறிவின் உச்சம் காட்டுமே!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment