01/10/2022

பறந்து திரிந்தால் சிறகு

 


பறந்து திரிந்தால் சிறகு!
உதிர்ந்து விழுந்தால் இறகு!
 
உயிர்ப்பாய் இருந்தால் உறவு!
உயிர்ப்பை இழந்தால் சருகு!
 
தலைமேல் எழுந்தால் உயிர்!
தலைகீழ் விழுந்தால் மயிர்!
 
இரகசியம் வெடித்தால் ஜனனம்!
பகிரங்கம் அடங்கினால் மரணம்!
 
பிறக்கையில் அழுதால் சிரிப்பு!
இறக்கையில் அழுதால் சிறப்பு!

No comments: