பேசுபொருள் இல்லாமல்
.......பேதலித்த கூட்டத்தார்
பேசுபொருள் ஆகிடவே 
.......பேசுகிறார் பேசவிடு!
காசுபொருள் பத்தாமல் 
........கையேந்தும் கூட்டத்தார்
காசுபொருள் வாங்கிடவே 
........கத்துகிறார் கத்தவிடு!
மாசுபொருள் தேடியதை 
.......வாங்குகின்ற கூட்டத்தார்
மாசுபொருள் விற்பனராய் 
........வாழ்கின்றார் வாழவிடு!
கூசுபொருள் பேசுகிற 
........கூத்தாடி கூட்டத்தார்
கூசுபொருள் ஆகிடவே 
.........கூவுகின்றார் கூவவிடு!
No comments:
Post a Comment