ஒவ்வொரு பயணிக்கும்
ஒவ்வொரு இலக்கென்றால்
ஓட்டுனருக்கு மட்டும்
ஒரே இலக்கு...
என்னதான் வாகனம் பிடித்திருந்தாலும்
நேரம் வந்தால் இறங்கத்தானே வேண்டும்..
இதில்..
இடை இடையே வரும் நிறுத்தங்கள் என்பது
கழிக்கவும் கூட்டவும் தரும் அவகாசங்களே
ஆனால்
இறுதி நிறுத்தம் என்பதே
விடை பெறும்போது வரும் நிறுத்தம்!
அதுவும் தற்காலிக நிறுத்தமே...
ஆம்....
போலாம் ரைட்...
No comments:
Post a Comment