#அரவான்
#கூத்தாண்டவர்
#கூவாகச்_சடங்கு
பாரதப் போரன்று 
.......பாண்டவரின் சார்பாக 
பூரணமாய்த் தந்தவனைப்
......போற்றுகின்ற - காரணமாய்
கூவாகம் கூடியங்கே 
.......கோவிலில் தாலிகட்டி
போவார்கள் கைம்பெண்*பேர்
.........பூண்டு!
(கைம்பெண்- விதவை)
#அரவானின்_அர்ப்பணிப்பு
அர்ச்சுனனின் மைந்தன் 
..........அரவான்போல் யாரிங்கே?
அர்ப்பணம் செய்திடுவர் 
...........ஆருயிரை- அர்த்தமுடன்
தர்ம இலக்கிற்காய் 
............தன்னையே காவுதந்த
சர்ப்பக்* குலமிவனே 
............சான்று!
(சர்ப்பம்- நாகர் இனம்)
#கண்ணனே_முன்வந்தான்
திருமணம் ஆனபின்னே 
.........தீர்த்திடலாம் என்றால்
தருபவர்யார் பெண்பிள்ளை 
.........தந்தால்- வருபவர்யார்?
யோசித்த கண்ணன் 
.........எதிர்ப்பட்டான் நங்கையாய்
காசினியே* வைத்தது 
..........கண்!
(காசினியே- உலகமே)
#திருநங்கையர்
ஆண்பாலே பெண்பாலாய் 
..........ஆகிய காரணத்தால்
ஆண்டுபல ஆனாலும் 
...........அக்கூத்தின்- ஆண்டவரை
மூன்றாம்பால் மாந்தரெல்லாம் 
............முண்டி யடித்துவந்து
தான்யார் எனமகிழ்வார் 
..............சார்ந்து!
செ. இராசா

No comments:
Post a Comment