கொட்டிடக் கொட்டிட முரசு கொட்டிட
உற்றவர் மற்றவர் ஒன்றெனக் காட்டிட
கற்றவர் சுற்றமும் கண்டதும் ஒட்டிட
பற்றிடப் பற்றிட பற்றுடன் பற்றிட
நற்றமிழ் போற்றிய முத்தமிழ்த் தேவரைப்
பாடிடப் பாடிடப் பாடியே ஆடிட
கொட்டிடு கொட்டிடு ஓங்கிக் கொட்டிடு
தட்டிக் கொடுத்தவராரு- ஐயா
தேவர் திருமகனாரு
விட்டு விரைந்திடப்பாரு- நல்ல
வெற்றி கொடுத்திடுவாரு...
தேசியத்தில் ஊறிநின்ற தேவர் எங்க சொத்து
பாசிசத்தின் வாலறுத்த வீரம் எங்க கெத்து
சாதிபேதம் வேரறுத்த சாட்சி நம்மப் பசும்பொன்
நீதிவேதம் கூறுகின்ற நீட்சி அந்தத் தாய்மண்
இந்துமுஸ்லிம் நல்லிணக்கம் ஐயா போட்ட கோடு
எங்களுக்கும் அவ்வழிதான் என்றும் போற ரோடு
தொப்புள்கொடி உறவுதானே நீயும் உண்மை சொல்லு!
தப்பாயெவன் உளறுறவன் வந்தா பிடிச்சு தள்ளு
தேவாதி தேவரு தென்னாட்டு மைந்தரு
வீராதி வீரரு வேதாந்தப் புத்தரு
தீராதி தீரரு தென்பாண்டி வேந்தரு
சூராதி சூரரு சுந்தாந்த சித்தரு
வாய்ப்பூட்டு சட்டமென்றான் இங்லீஷ் காரனன்று
கண்காட்டி கைகொடுத்தார் போடா தம்பியென்று
ஆன்மீகம் என்றாலும் அங்கே முருகபக்தர்
அதிரடிதான் என்றாலும் அங்கும் தேசபக்தர்
முக்குலத்தோர் தெய்வமென்பார் முன்னோர் ஒன்றுகூடி
எக்குலமும் போற்றுதன்றோ ஐயா பேரைப்பாடி
செந்தமிழர் வாழ்வினிக்க எல்லாம் ஒன்றுகூடி
செந்தமிழில் வாழ்த்திடுவோம் தேவர் பாட்டைப்பாடி...
No comments:
Post a Comment