#ஔவைத்_திங்கள்_13
#கொன்றை_வேந்தன் #வ_எண்_73
#மீகாமன்_இல்லா_மரக்கலம்_ஓடாது
தலையில்லா முண்டங்கள் சந்தைக்கு வந்தால்
விலையேதும் இல்லை விடு
(1)
இல்லானோ இல்லாளோ இல்லத்தில் ஓர்தலைவர்
இல்லையேல் இல்லையோர் இல்
(2)
இல்லாத போதும் இருப்பது போலெண்ணெல்
நல்ல தலைமையின் மாண்பு
(3)
பாராட்டும் பண்பைப் பழுதின்றி செய்தால்தான்
பாராட்டும் வாழ்வுண்டு பார்
(4)
தப்பான தென்று தலைமைக்குச் சொல்பவரை
தப்பென்று சொல்லுவதும் தப்பு
(5)
இரண்டாம் தலைமையே இல்லாமல் செய்தால்
இரண்டாகிப் போதல் எளிது
(6)
அமைச்சர்கள் தப்பை அனுமதிக்கும் போதே
அமைந்த தலைமைக்கும் ஆப்பு
(7)
தேனீக்கள் நன்கறியும் தேர்வாகும் ராணீயை
ஆணீக்கள் பாவம்தான் அங்கு!
(8.)
தலை-நரை கண்ட தசரதன் செய்கை
தலைமுறை தாண்டிடும் சால்பு
(9)
தன்னலம் இல்லாத் தலைவனால் மட்டும்தான்
நன்நிலைக்கு முன்னேறும் நாடு
(10)
செ. இராசா
17/10/2022
ஔவைத் திங்கள் - 13 -- தலைவன் இல்லையேல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment