அனைவருக்கும் இனிய வணக்கம்,
செவிக்குண வில்லாத போழ்து
சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
----குறள் எண் – 412
இங்கே செவிக்கு உணவு என்ற சொற்றொடரைக்
கவித்துவமாக யோசித்தால், அறிவிக்குத் தீனி அல்லலு செவிக்குத் தீனி என்று எடுத்துக் கொள்ளலாமா?!...அறிவிக்குத் தீனி எங்கே கிடைக்கும்? சொற்பொழிவு, பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகளில் கிடைக்கும்..சரிதானே?...
அறிவிக்குத் தீனி தரும் இந்த நிகழ்வுகள் நடக்கும்போதே இடையில் உணவு வழங்கினால் நன்றாகவா இருக்கும்? இருக்காதுதானே?!! ஆக அந்த செவிக்கு உணவிடும் நிகழ்வுகள் இல்லாதபோது அதாவது முடிவுறும் போதே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். அதாவது தேனீர் இடைவேளை அல்லது உணவு இடைவேளை வழங்கப்படும்.
ஆமாங்க...
செவிக்குத் தீனி இல்லாத போதே வயிற்றுக்குள் ஏதோ கொஞ்சம் போட தோன்றும்.
சரிதானே....?
.....பிடித்தால் தொடரும்!
No comments:
Post a Comment