#விக்ரமராஜா_ஐயா_பாடல்
தொகையறா:
****************
வணிகர்கள் சங்கத்தை ஒருங்கிணைச்சு
தமிழகப் பேரமைப்ப வடிவமைச்சு
பலபெரும் சோதனைய முறியடிச்சு
சிறுகுறு வணிகரையும் வாழவைச்ச-நம்ம
தலைவரை வாழ்த்திடுவோம்
பல்லவி
**********
சிகரத்தின் சிகரம்
சிரிச்சாலே செதறும்
அவரெங்க அண்ணாச்சி தான்
துணிவோட தொடக்கம்
பணிவோட விளக்கம்
அவரெங்க மனசாட்சி தான்- அவருப்
புகழோட அரசாட்சிதான்
அண்ணாச்சி பேரப்பாரு விக்ரமராஜா
அவர்தான் எங்களோட ராஜாதிராஜா
அண்ணாச்சி போலயாரு உத்தமராசா
அவர்தான் எப்போதுமே வர்த்தகராசா
எங்க வர்த்தக ராசா
சரணம்-1
***********
சட்டப்படி தட்டிக்கேட்கும் தலைவரு- அவரு
பட்டிதொட்டி புகழுகின்ற வணிகரு...
எட்டியெட்டி ஏறிநிற்கும் தலைவரு- அவரு
எப்போதுமே எளிமையான வணிகரு..
எல்லோருமே பொழைக்கனுன்னு ஆசை வச்சாரு!
என்னன்ன வழிஇருக்கோ எல்லாஞ் செஞ்சாரு
ஊரடங்கு காலத்திலும் உதவி செஞ்சாரு
உள்ளூரு காவல்துறை போல நின்னாரு
அண்ணாச்சி பேரப்பாரு விக்ரமராஜா
அவர்தான் எங்களோட ராஜாதிராஜா
அண்ணாச்சி போலயாரு உத்தமராசா
அவர்தான் எப்போதுமே வர்த்தகராசா
எங்க வர்த்தக ராசா
சரணம்-2
***********
சங்கங்கள சேர்த்து வச்சத் தலைவரு- அவரு
சிங்கம்போல நிமிர்ந்து நிக்கும் வணிகரு..
எங்களோட பேரமைப்பின் தலைவரு- அவரு
தங்கம்போல ஜொலி ஜொலிக்கும் வணிகரு...
பொட்டிக்கடை வணிகரையும் வாழ வச்சாரு
பொல்லாதவர் வரும்வழிய பூட்டச் சொன்னாரு
கட்சிபேதம் பார்த்திடாமல் கருத்தச் சொல்வாரு
வச்சுசெய்யும் வரிபோட வேணாமென்பாரு
செ. இராசா
No comments:
Post a Comment