#தேடிவரும்_தெய்வம்
#குடிசெயல்வகை
#குறளின்_குரலாய்
குடும்பம் நடத்துமிடம் கோவிலென எண்ணி
விடுவதை விட்டால்தான் வீடு
(1)
குடும்ப அமைதி குறையாமல் வாழும்
குடும்பங்கள் தெய்வக் குடில்
(2)
கடன்சுமை ஏற்றாமல் காக்கின்ற பெற்றோர்
நடமாடும் தெய்வமே நம்பு
(3)
பெற்றோர் கடனடைக்க பிள்ளைகள் உள்ளதென
பெற்றோர் நினைத்தால் பிழை
(4)
பெற்றோர்கள் சேர்த்ததை பிள்ளைகள் மூலமாய்
மற்றோர்க்கும் தந்தால் மதிப்பு
(5)
தன்குடி காக்கத் தவறாத நல்லோரை
என்றைக்கும் காக்கும் இறை
(6)
குடிகள் பலகூடும் கூட்டாட்சி ஓங்க
குடிகளுக்குள் வேண்டும் குணம்
(7)
குடும்பத்தின் சூழல் குதூகலம் ஆனால்
அடுத்தவர்க்கும் போகும் அது
(
ஓடி உழைத்தபணம் ஓரளவே என்றாலும்
கோடி சுகமுணக்(கு) உண்டு
(9)
கடனாய் அன்றிக் கடமையாய்ச் செய்து
கடவுளை நம்பிக் கட
(10)
செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_177
No comments:
Post a Comment