இன்று (17.09.2021) வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் செல்லும் அல்ஜர்க்கா போனபோது, அங்கே உணவு பரிமாறும் நேபாளி ஒருவர் அருகில்வந்து போனவாரம் நாங்கள் ஒரு தங்கக் கைச்சங்கிலியைத் தவறவிட்டதாகக் கூறி அதைப் பத்திரமாக கல்லாவில் இருந்து எடுத்துத் தந்தார். என் மனைவி அது தங்கமில்லை போலிதான் என்று கூறினாலும் அவர்களுக்கு அதை அப்படியே திரும்பத் தரவேண்டும் என்ற மனது இருக்கிறதல்லவா....அது அதுதான்....அங்கே பெரிய விடயம். அதையும்விட எம் மனதைத் தொட்ட ஒன்று அவர் என்னை "அண்ணன் வாடிக்கையாளர்" என்று ஆங்கிலத்தில் ANNAN CUSTOMER என்று போட்டிருந்ததே....
இந்த அன்பு...இதுபோதுங்க...இவ்வளவுதான் வாழ்க்கைநன்றி தம்பி
No comments:
Post a Comment