#வெளிநாட்டுவாழ்_வாழ்வியல்
(சிறு வேண்டுகோள்:
இந்தப்படத்தால் (Memes) எழுந்த வரிகளே இவை. அனைவரும் படத்தை மட்டும் பார்த்துவிட்டு நகர்ந்து விடாமல் பாடலையும் படிக்க வேண்டுகிறேன்)
இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க
இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க
ஒன்ன முடிச்சாக்க ஒன்னு வருகுது
என்ன செஞ்சாலும் எல்லை மீறுது
வச்ச நகையெல்லாம் வட்டி கேட்குது
சொச்ச கடன்வந்து சுருட்டிப் போடுது
இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க
இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க
++++++++++++++++++++++++++++++
நாளை(ய) நினைக்காமல் நாளைத் தள்ளநான்
நாயாப் பொறக்கலையே என்னசெய்ய நான்?!
காசே வேணாம்னு காலம் தள்ளநான்
ஆசை கிடையாத புத்தனில்லை நான்!!
வருசம் ஒரு வருசம் உழைச்ச பின்னால
மாசம் ஒரு மாசம் லீவு கிடைக்குது
ஒருக்கா வருவோன்னு ஊரு வந்தாக்கா
இருக்கும் டவுசர்கூட கிழிஞ்சு போகுது
வாப்பா வாப்பான்னு தூக்கிக் கொஞ்சுனா
பாப்பா மாமான்னு சொல்லும் பாருங்க
ஏன்பா ஏன்பான்னு மனசுக் குள்ளாற
ஆப்கான் பாப்கானா வெடிக்கும் பாருங்க...
என்ன செய்யுறது ஒன்னும் புரியல
ஏறும் விலைவாசி தாங்க முடியல
ஒன்ன இழந்தால்தான் ஒன்னு கிடைக்குது
என்ன வாழ்க்கையிது இன்னும் விளங்கல...
செ. இராசா
No comments:
Post a Comment