சுதந்திரக் காற்றின்
சூட்சுமம் புரிய
அடிமை முகமூடியை
அறுத்தெறியுங்கள்...
தழுவியதைப் பற்றியே
தவழ்ந்து வருகிறோம்...
மலரென்றால் மணம் வரும்
மற்றதென்றால் எது வரும்?!
வருவதைத் தருவதே யாம்
தருவதில் வருவதல்ல..
ஒருவேளை...
இன்னும் நாறுதென்றால்
எதுற்கும் நாசியைக் கழுவுங்கள்...
சுதந்திரக் காற்றின்
சூட்சுமம் புரியும்
#சுதந்திரக்_காற்று
No comments:
Post a Comment