18/08/2020

கவி(தா) வெண்பாக்கள்

 


#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்
#மனைவியாரே

#கவி(தா) #வெண்பாக்கள்

கவிதா எனக்கோர் கவி-தா எனநீ
கவிஞனாய் எண்ணிக் கதைத்தாய் பலநாள்
கவிதர நானும் கருத்தில் நிறுத்திக்
கவித்ததே இந்தக் கவி!
(1)

கவியின் அரசராய்க் கண்டீர் ஒருவர்
கவிப்பேர் அரசராய்க் கண்டீர் ஒருவர்
கவிக்கோ ரகுமானாய்க் கண்டீர் ஒருவர்
கவிபதி நானோர் கவி!
(2)

கவியில் திளைக்கும் கவிஞர் கனவில்
கவியாய்ப் பொழியும் கவிதை மொழிபோல்
கவியில் கலந்து கரைகிற நானும்
கவிக்காய் செதுக்கும் கவி!
(4)

கவிக்கக் கவிக்கக் கவியாய்ப் பெருகக்
கவித்தேன்! களித்தேன்! கவியாய் தினமும்;
கவித்தால் களைப்பென் கவியால் விலகிக்
கவிபோல் இனிக்கும் கவி!
(3)

கவிதா தமிழில் கவி-தா எனநான்
கவிஞனாய் அன்றிக் கணவனாய் இன்றுக்
கவிதர வேண்டிக் கனிவுடன் கேட்டுக்
கவிக்கிறேன் நானும் கவி!
(5)

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

No comments: