11/08/2020

இயற்கையின் சிறப்பு-----வள்ளுவர் திங்கள்-123

 #இயற்கையின்_சிறப்பு
இயற்கை உணர்த்தும் இயற்பியல் பாடம்
வியப்பினில் ஆழ்த்தும் விரும்பு
(1)

#இயற்கையை_நோக்கு
எந்தெந்த காய்கறி எந்தெந்த தன்மையென
கண்டதும் சொன்னார்கள் காண்
(2)

#பித்தம்_சூடு
வெண்டைக்காய் தீபம்போல் மேல்நோக்கிக் காய்ப்பதால்
சொன்னார்கள் அக்காயைச் சூடு
(3)

#சிலேத்துமம்_நீர்
புடலைங்காய் நீரைப்போல் பாய்வதாய்க் கண்டோர்
படக்கென்று நீரென்றார் பார்
(4)

#வாதம்_காற்று
பரங்கிக்காய் காற்றைப்போல் பல்திசையில்
ஊதி
விரவியதால் சொன்னார்கள் வாயு
(5)

#இயற்கை_உண்மை
நம்நாட்டில் நம்மூரில் நம்மோடே உண்டான
நம்மண்ணின் காய்களே நன்று
(6)

#எண்ணைய்
என்றைக்கும் எப்போதும் எள்ளெண்ணெய் நல்லெண்ணெய்
மண்ணெண்ணெய் எவ்வெண்ணய் பார்
(7)

#அரிசி
மட்டை அரிசியென்று மட்டமாய்ப் பேசாமல்
சட்டியோடு சாப்பிட்டால் சத்து
(8)

#கோழி
வெள்ளைப் பிராய்லரை வெட்டிட எண்ணாமல்
நல்லநாட்டுக் கோழியை நாடு
(9)

#கருப்பட்டி
நாட்டுக் கருப்பட்டி நல்ல இனிப்பென்றால்
மாற்றுப் பொருளெல்லாம் ஏன்
(10)

#புரோட்டா
வேதிப் பொருளுள்ள வெற்றுப் புரோட்டாவால்
பாதிப் படைகிறார் பார்
(11)

#செயற்கை_தவறா?
இயற்கையை மாற்றாமல் எப்போதும் சென்றால்
செயற்கையும் தப்பில்லை செய்
(12)

#செயற்கை_எப்படி_வேண்டும்
சூரிய மின்சாரச் சூத்திரம்போல் செய்கின்ற
காரியங்கள் செய்தால் களிப்பு
(13)

#இயற்கை_நீதி
செயற்கையாய் செய்கின்ற செய்வினைத் தீதை
இயற்கையே கண்டிக்கும் இங்கு
(14)

#தெய்வம்_ஓடிவரும்
செய்யுமுன் ஆராய்ந்து செய்வினைகள் நன்றென்றால்
தெய்வமே ஓடிவரும் செய்
(15)

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_123
#தமிழ்ச்சோலை

No comments: