எரியிற தீயில எண்ணைய ஊத்துனா
எப்படிப் பரவும் சொல்லு?!
மலர்கிற காதல மறைக்கயில் வெடிக்கிற
அலர்*போல் பரவும் கேளு!
அடிக்கிற மழையெலாம் ஆத்துல ஓடுனா
அணையிட முடியுமா சொல்லு?!
துடிக்கிற வேகத்தைத் தடுக்கிற வழியில்ல
தானா முடிஞ்சிடும் பாரு!
வயசுக்கு மீறிய வழியிலப் போகுற
விடலைய விடணுமா சொல்லு?!
பிஞ்சுல பாயிற பயபுள்ள நெஞ்சில
நஞ்சிடும் நினைப்பினைக் கொல்லு!
அடிக்கடி வெடிக்கிற அன்பிலே ஆள்கிற
அகமதின் உறவினைச் சொல்லு?
ஒருத்திய நினைக்கிற உண்மையில் பழகுற
உயர்தரக் காதலை அள்ளு!
செ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_125
#இனிய_காதல்
#அலர்_கிசுகிசு
*கிசுகிசு
24/08/2020
வள்ளுவர் திங்கள்-125 இனிய காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment