17/02/2026

விளம்பரம்

 


 
படைப்பில்
பல்சுவை இருந்தாலும்
இப்படித்தான் என இயம்பாவிடில்
எப்படி விலைபோகும்?!
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
அஃதே; விளம்பரமில்லா பண்டமும்
ஆம்...
விளம்பரம்
விளம்பினால் வரு(ம்) மானம்!
இல்லையேல்....வெறும் ஓலம்!
அதீத எதிர்பார்ப்பும் ஆபத்தே: அது
அளவை மீறிய உப்பைப்போல
அறுசுவை படைப்பையும்
அருவருக்க வைத்துவிடும்!
ஜாக்கிரதை!
சில விளம்பரங்கள் மோசமானவை!
அது உண்மையில் விசம் தூவும்!
ஊடக வழி தூபமிடும்!
சில விளம்பரங்கள் வசீகரிப்பவை!
அது இலவசமென வரவு வைக்கும்!
வீக்கமென செலவு வைக்கும்!
சில வெற்று அறைகூவல்களும்
ஒரு வகையில் விளம்பரங்கள்தான்
அவை தன் இருப்பைக் காட்ட
அவர்களாகவே எழுப்பும் ஓசை...
கிரிக்கெட் விளையாட்டில்; சில
கிறுக்கர்கள் செய்வதுபோல்
போட்டி முடிவே
இவர்களையும் முடித்துவிடும்...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
சுய தம்பட்டங்கள் எல்லாம்
சுய தம்...பட்டங்கள் ஆகா..
அது...சுயமாய் தம் புட்டங்களில்
அவர்களே வைக்கும் சூடு..
அவ்வளவே...
செய்யுங்கள் விளம்பரம்
செய்ததைச் சொல்லி...அல்லது
செய்வதைச் சொல்லி
செய்யாதீர் விளம்பரம்
செய்யாததைச் சொல்லி...அல்லது
செய்ய முடியாததைச் சொல்லி!

No comments: