15/02/2026

தாகம் தீர்க்கும் சொர்க்கம்

 


 
அதுவே ரய்யான் ரய்யான்...
ஏகன் செய்த அற்புதம்
அதுவே ரய்யான் ரய்யான்
ரய்யான் ரய்யான் ரய்யான் ரய்யான்
ரமலான் நோன்பின் புண்ணிய
பலனே ரய்யான் ரய்யான்...
பொறுமை நேர்மை அன்பின் வரமே ரய்யான் ரய்யான்
ரய்யான் ரய்யான் ரய்யான் ரய்யான்
பசியை உணர வேண்டுமென்றே
படைத்த இறைவன் நினைத்தானே..
வருடக் கணக்கில் மாதமொன்றை
நோன்பு நோற்க விதித்தானே...
புலன்கள் அடக்கும் போதனை முறையை
புரிந்து நடக்க வகுத்தானே
இம்மை வாழ்வின் சோதனை முறையை
மறுமைக்காகவே கொடுத்தானே..
( பாங்கு ஒலிக்க வேண்டும்)
கொடுக்கும் உள்ளம் வேண்டுமென்றே
சகாத் கொடுக்க பணித்தானே..
ரமலான் நோன்பு நோற்றபின்னே
பித்ரா கொடுக்க பணித்தானே..
உஷ்ரு சதக்கா என்றேஅவரும்
கருணை புரிய விதித்தானே
கருணைக் கடலாய் இருப்பவன் அன்றோ
துளியில் கடலைக் காண்பீரோ.....
(பாங்கு ஒலிக்க வேண்டும்)
தாகம் தீர்க்கும் சொர்க்கம்
அதுவே ரய்யான் ரய்யான்...
ஏகன் செய்த அற்புதம்
அதுவே ரய்யான் ரய்யான்
ரய்யான் ரய்யான்

No comments: