ஊனொன்றைத் தந்தாய்
...உயிரொன்றை வைத்தாய்
....உலகமிதில் உலவ விட்டாய்!
வானொன்றைத் தந்தாய்
.....வளியொன்றை வைத்தாய்
......வகைவகையாய் படைத்து விட்டாய்!
ஏனொன்றைத் தந்தாய்
.....எமதென்று வைத்தாய்
.....எனையறிய வையும் இறைவா!
நானொன்றைத் தந்தால்
....நானென்ன தருவேன்
....மனமார்ந்த நன்றி இறைவா!
பைந்தமிழைத் தந்தாய்
....பறைசாற்ற வைத்தாய்
....படிப்படியாய் ஏற்றி விட்டாய்!
ஆய்ந்துணர வைத்தாய்
...அறம்புரியச் செய்தாய்
...அறிவொளியைத் தூண்டி விட்டாய்!
சாய்ந்தழிய வைத்தாய்
....சகலருக்கும் ஒன்றாய்
....சமத்துவத்தைத் தந்த இறைவா!
ஓய்ந்தமரும் நாளில்
....உளமுணர்ந்த தாலே
....உரைக்கின்றேன் நன்றி இறைவா!
No comments:
Post a Comment