கலையை விதைப்பவன்
கலையாய் துளிர்ப்பவன்
மதித்தால் ஒளிர்பவன்
மதியால் கவர்பவன்
அழைத்தால் வருபவன்
தொலைத்தால் துறப்பவன்..
கலை வேறு
கலைஞன் வேறல்ல
கலை வேர் என்றால்
கலைஞன் விருட்சம்!
கலை விருட்சமென்றால்
கலைஞன் விழுது!
ஆம்
ஆனால்...
கலையை மதியா
கலைஞன் இருந்தால்
கலைஞனை எப்படி
கலை உயர்த்தும்?!!
எனில்;
மெல்லக் கலையினி...........
மன்னிக்கவும்
கலைஞனும் தான்....
No comments:
Post a Comment