#பார்த்ததும்_தோற்றேன்
#பாடல்
உன்னைக் காணலைனா பத்தி எரியுது
ஒன்னும் புரியாமல் படபடங்குது
கண்ணோ கண்ணகியா கதகதங்குது
காதல் என்றாலே கொளுத்தச் சொல்லுது
ஆனால் ..
கண்ட பின்னாலே காட்சி மாறுது
காணும் பொருளெல்லாம் காஷ்மீர் ஆகுது
என்னக் கருமமிது எனக்குப் புரியல
இன்னுமதை எனக்கு விளக்(ங்)க முடியல...
லாலே லால லல்லா லால லல்லா லா
லல்வில் லா (law) எல்லாம் ஒன்னுமில்ல லா
உன்னால் எல்லாமே மாறிப்போனது
ஊரே ஊடகமா சாட்சி சொல்லுது
என்னால் முடியாது இதுக்கு மேலடா
ஏன்டா என்னைவிட என்ன வேலைடா
நீ...
கண்ணால் பேசசொல்ல கவ்விக் கொள்ளுது
மூச்சோ தகிடதகிட மூச்சு வாங்குது
கட்டில் மெத்தையெல்லாம் கனவு காணுது
மெட்டில் உனைக்கட்டிப் பாட சொல்லுது
லாலே லால லல்லா லால லல்லா லா
லல்வில் லா (law) எல்லாம் ஒன்னுமில்ல லா
செ. இராசா
No comments:
Post a Comment