கற்றோர்சொல் கேள்
#1_முன்னுரை
கற்றோர்சொல் வார்த்தைகளைக் காதிலே வாங்குவோர்
கற்றோராய் மாறிடுவார் கள்(ல்)
#2_இலக்கியச்_செம்மல்_கம்ப_வாரிதி
இலங்கை ஜெயராஜின் இன்தமிழ்ப் பேச்சில்
இலக்கியம் தித்திக்கும் இங்கு
#3_சொல்லின்_செல்வர்
சுகிசுவம் பேசும் சுவைமிகு பேச்சில்
அகிலம் நமதாகும் நம்பு
#4_தேசாந்திரி_எஸ்_ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் எஸ்ராவின் இன்னுரை கேட்டால்
எளிதென்பீர் எல்லாம் இனி
#5_தன்னம்பிக்கை_IPS
கலியப் பெருமாளின் காந்தவுரை கேட்க
வலிமை பெருகிடும் வா
#6_பட்டிமன்ற_பிதாமகர்
பாப்பையா ஐயாவின் பாமரப் பேச்சால்தான்
பார்க்கின்றார் பட்டிமன்றம் பார்
#7_பட்டிமன்ற_நாயகி
பாரதி பாஸ்கரின் பைந்தமிழ் கேட்டாலே
பாரதி வந்திடுவான் பார்
#8_கவியாண்டவர்கள்
கவிக்கோ கலைஞர் கவியரசர் வாலி
கவியரங்கக் கற்கண்டு காண்
#9_சின்னக்கவியரசர்
எம்குரு விக்டர்தாஸ் ஏற்றிடத் தூண்டிவிடும்
கம்பீரப் பேச்சும் கவி
#10_முடிவுரை
அடிபொடிநான் எம்குற(ர)ளில் ஆற்றுகின்ற பேச்சில்
முடிந்தவரை வைத்துள்ளேன் முற்று
செ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_168
No comments:
Post a Comment