வள்ளுவர் திங்கள் 166
நெஞ்சினிலே
***********************
குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.
கவிதை
குறள் வெண்பாவில்
**********************
கண்ணில் வலைபின்னி கைதி எனவாக்கி
அன்பைப் பொழிந்தாயாம் அன்று....
கண்ணைக் குளமாக்கி காதல் ரணமாக்கி
இன்னல் கொடுத்தாயாம் இன்று....
ஏதும் அறியாமல் ஏதேதோ சொல்கின்றார்
போதும் புறப்பட்டு வா!
மோதும் குணங்கொண்ட மூர்க்கர்முன் நீவந்தால்
யாதும் விலகிவிடும் வா!
உருவாய்த் தெரிந்தால்தான் உள்ளதாய்ச் சொல்வோர்
அருவத்தை ஏற்பாரா ஆய்!
இருப்பதை இல்லையென்பார் என்றைக்கும் உள்ளார்
வருவதை சந்திப்போம் வா!
No comments:
Post a Comment