கண்களின் கேள்விகளுக்கு  
புன்னகையால் பதில் சொன்ன
அந்தப் பெண் பார்க்கும் படலம்...
பனிக்குடம் உடைத்த பிஞ்சை 
பக்குவமாய்த் துடைத்து தந்த   
அந்தக் கணம்
நாயாய் அலைந்தபோது
கிடைக்காத வேலை 
தேடாத நேரத்தில் 
தேடிவந்தத் தருணம்
சிந்தையில் உதித்த சந்தமொன்று    
சிவவாக்கியர் சந்தமென்று 
ஆசான் பாராட்டிய 
அந்த நிமிடம்...
இப்படி... 
எத்தனையோ தருணங்கள்... 
மௌனக் கவிதைகளாய்
மொழியின்றி மொழிகிறது...
ஆம்...
அன்றைப் போலவே.... இன்றும்
செ. இராசா 

No comments:
Post a Comment