15/07/2021

மெட்டு: ஓம் ஜெய்ஜெகதீசுஹரே




சிவன் அல்லா ஜீசஸ் என்றே
இவர்..யாவரும் யார் சாமி?
பக்தியின் பேராலே சண்டையா?!
சக்தியின் பேராலே சர்ச்சையா?!
யாவரும் யார் சாமி!
அட.... யாவுமே ஓர் சாமி!

ஆதியிலே ஒரு சாமி
அது பல பல பேரினிலே
சாமி பல பல பேரினிலே
குழுக் குழுப் பல குழு வாலே-பல குழுப்பழுகிய தாலே
எத்தனை பேர்சாமி
ஆனால் யாவுமே ஓர்சாமி...

நீர் நீலு பாணி எல்லாமே
உரைத்திடுமோர் பொருளே...
மொழி உரைத்திடும் ஓர் பொருளே
இறைவனும் அதுபோலத் தானே
இறைவனும் அதுபோலத் தானே
ஆன தென்றே அறிந்தால்..‌
அட யாவுமே ஓர் சாமி

✍️செ. இராசா

No comments: