25/07/2021

குறிஞ்சிப் பாட்டு



அனைவருக்கும் வணக்கம்,

இங்கே, திருமணத்திற்கு முன்னர் தன்னையே இழந்த பெண்ணொருத்தியின் காதல் உணர்வையும், அதற்குக் காரணமான சூழ்நிலையையும் அப்படியே காட்டுகின்ற #கபிலரின் அற்புதமான கவிதையைக் குறள் வடிவில் வழங்கியுள்ளேன்.

2000ஆம் வருடங்களுக்கு முன் இருந்த தமிழர்களின் காதல் உணர்வுகளையும், அவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சிய விதங்களையும் காட்சிப்படுத்துகிறது அக்கவிதை. அதை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குறள் வெண்பாவில் படைத்துள்ளேன். ஒரு நல்ல கவிதை அனைவரிடமும் போக இப்படைப்பு துணை செய்யுமாயின் அது அடியேன் செய்த பாக்கியமே........
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#குறிஞ்சிப்_பாட்டு
#கபிலர்_ஏற்றிய_கவியின்_சுருக்கம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#அறிமுகம்

கல்யாணம் ஆகும்முன் காதலர் சேர்ந்ததை
நல்லவிதம் சொன்னகவி நூல்
(1)
🖤♥️💙💜💚🤎💙💜💚💜💚💜💚💜

#என்னுரை

சங்க இலக்கியத்தின் சான்றான இந்நூலை
எங்கே படிக்கின்றார் இன்று?
(2)

எளிய மொழியில் இயம்பிட எண்ணி
அளித்தேன் குறளால் அடி
(3)

கவியைப் படைத்த கபிலரை வேண்டி
கவிப்பொடி செய்தேன் கவி
(4)
💙🤎🤎💙🤎♥️💜♥️♥️💜♥️💜💜♥️

#தோழியின்_நிலைபற்றி_தாய்க்குக்_கூறல்

சொல்கின்றேன் கேளம்மா!.. சோர்வுற வேண்டாம்நீ!
நல்லவள்தான் எம்தோழி நம்பு
(5)

நோயெல்லாம் இல்லையம்மா! நோகின்றாள் பாரம்மா...
மாயம்தான் காதலெனில் ஆம்!
(6)
💚💙🤎💜♥️💚🤎💜💙🤎💚🤎💜♥️

#வயலுக்குக்_காவல்காக்க_போனபோது
#HEROINE_INTRODUCTION

தினை*விதைத்த நம்நிலத்தைத் தேடியன்று போய்தான்
வினைவிதைத்தாள் தோழியும் அன்று!
(7)

(தினை- நவதானியங்களில் ஒன்று)

பறவைகள் கொத்தாமல் பார்த்திட வேண்டி
பறவைபோல் கண்வைத்தோம் பார்
(😎

இசைக்கருவி* கொண்டே இசைந்திட்ட பாடல்
திசையெட்டும் போனது சேர்ந்து
(9)

(குளிர், தட்டை முதலான அந்தக்கால கருவிகள்)

💙🤎💙🤎💙🤎🤎♥️💜🖤💚🤍💚🤍

#குளித்தபின்_99_வகை_பூ_சேர்த்தார்கள்

சுனையில் குளித்தோம்! சுறுசுறுப்பாய் ஆனோம்!
முனைப்போடு பூ*சேர்த்தோம் பின்பு!
(10)

(பல வகைப்பூக்களை சேர்க்கிறார்கள்)

💜💙💚🤎♥️💜🤎💚🖤♥️🤎💙💚💙

#ஆடவன்_வருகை #HERO_INTRO

அந்நேரம் தானம்மா ஆதவனாய் அங்கொருவன்
அந்தியிலே மாறிவந்தான் அங்கு
(11)

பயந்து நடுங்கியிவள் பார்க்காமல் சென்றால்(ள்)
நயந்து நலம்கேட்டான் வந்து!
(12)
💜💜🖤💜🖤🖤💚💚💚💚💚💙💙💙

#மதம்_கொண்ட_யானை

அப்போது பார்த்தாம்மா ஆர்ப்பரிக்கும் யானைவரும்?!
அப்பப்பா...மூர்ச்சையுற்றோம் அங்கு!
(13)
💙💚💙💚💙💚💙💚♥️🖤🖤♥️🖤🖤

#யானைக்கு_பயந்து_ஆடவனைப்_பற்றுதல்

யானைவந்த வேகத்தில் எங்கெங்கோ நானோட
ஆணை(ப்)போய்த் தொட்டாள் அவள்
(14)
💚💙💚💙🖤💜🖤🖤🖤💜💜💚💚♥️

#ஒரே_கல்லில்_இரு_மாங்காய்

வில்லை வளைத்தன்று விட்டவோர் அம்பாலே
எல்லாம் முடிந்ததம்மா....அன்று!
(15)
♥️💙🤎💚🖤💚💚💚💚💚🖤🖤♥️💚

#கலவி

கையில் விழுந்தகனி கற்கண்டாய்த் தோன்றுமெனில்
வாயில் சுவைக்காதார் யார்?
(16)
💚💙🖤🤎💚♥️💙🖤🤎🖤♥️💚🖤🤎

#தொடர்கதை

அன்றுமுதல் இன்றுவரை அண்ணாரும் அம்மாளும்
ஒன்றுக்குள் ஒன்றானார்! ஓம்!
(17)

உடலும் மனமும் ஒருங்கே சேர
கடந்தார் கிடந்தார் தினம்
(18)
♥️💙🤎💚♥️💚🤎🖤♥️🖤🖤🤎🖤♥️

#திருமணம்_செய்துவைக்க_ஆலோசனை

கந்தர்வம் செய்துள்ள காளையையும் கன்னியையும்
சொந்தமாய் ஆக்கிடம்மா சூழ்ந்து
(19)
♥️💙🤎💚🖤🤎💚♥️🖤♥️🖤♥️🖤♥️

#முடிவுரை

களவியல் என்கின்ற காதல் நெறியை
உளவியல் நோக்கில் உணர்
(20)
♥️💙🖤🖤💚🖤🖤💚♥️🖤🖤💚💚♥️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

No comments: