#கண்ணில்_ஒரு_மின்னல்_ஒளி
உன்னில் எழக் கண்டேன்
என்னுள் அதைக் கொண்டேன்
கம்பனாய் ஆனேனடி....
கண்ணே நெஞ்சின் காவியம் நீதானடி...
கன்னித் தமிழின் கட்டிக் கரும்பே
கன்னித் தமிழின் கட்டிக் கரும்பே
கண்பார்த்ததும் கிக்கேற்றிடும் கள்ளாகிடும் பெண்ணே
காரைக் குடியிலன்று கண்டவுடன் காலம் இழந்து விட்டேன்
கூரைப் புடவையிலே கண்டவுடன் ஞாலம் மறந்து விட்டேன்
எங்கும் போகா தியானம் கற்றேன்
உன்னுள் யோகா தீபம் பெற்றேன்
அட உன்னை என்ணி எண்ணி
என் நானினை நான் இழந்தேன்
செ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_160
#கண்ணும்_கண்ணும்
24/05/2021
மெட்டு: அங்கம் உனதங்கம் மிருதங்கம் ----கண்ணில் ஒரு மின்னல் ஒளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment