குற்றம் குறைகளைய ஓடிவா சாயி
சுற்றம் சுகமடைய ஓடிவா சாயி
எங்கள் இறைவா
கொஞ்சம் விரைவா...(2)
அகில உலகம் அமைதி அடைய வா
அகத்தின் அழுக்கை விரட்டித் துடைக்க வா
உள்ளத்துள உள்ளதுதான் உள்ளபடி சொந்தமய்யா
நல்லநல்ல எண்ணம்வர நல்லபடி செய்யுமய்யா
கொல்லுங்கொள்ளை நோய்க்கிருமி இல்லாமலே பண்ணுமய்யா
மெல்லமெல்ல மீண்டுவர மீண்டுமிங்கே வாருமய்யா
எங்க சாயி சாமி-நீ
நல்ல வழி காமி
நல்ல சாமி சாயி- நீ
எங்களோட தாயி....
No comments:
Post a Comment