வணக்கம் உறவுகளே,
சமீப காலமாக நான் முகநூலில் அதிகமாக எழுதுவது உண்மையே. அதற்காக நான் வேலை வெட்டி எதுவும் செய்வதே இல்லையா என்று பலபேர் ஐயப்பட்டு என்னிடமே கேட்கின்றார்கள். அவர்களுக்கு முதலில் ஒரு விளக்கம் சொல்லிவிட்டு பின்னர் கட்டுரையைத் துவங்குகிறேன்.
கவிதை
மற்றும் நான் போடும் பதிவுகள் என்பது பெரும்பாலும் அதற்காக பிரத்யேய நேரம்
ஒதுக்காமல், இறைவன் அருளால் உதயமாவதை உடனே பதிவதை மட்டுமே நான்
செய்கின்றேன். இதற்காகத் தனியாக மெனக்கெடுவது இல்லை. மேலும், நான் எப்படி
வேலை செய்கிறேன் என்பதை எனக்கு மேல் உள்ள மேலாளர்கள் மற்றும் சக
பணியாளர்கள் நன்றாக அறிவார்கள். ஆகவே நான் வேலை செய்கிறேனா இல்லையா என்ற
சந்தேகம் இருந்தால் என்னை நேரடியாக அழையுங்கள்.
மேலும், முகநூலில் மட்டுமல்ல வேறு பல இடங்களிலும் இயங்குகின்ற உறுப்பினராக தன்னார்வலாராக உள்ளேன். ஒரே நேரத்தில் எப்படி பல வேலைகள் செய்ய முடியும் என்றால், அதற்குக் காரணம் வேதாந்த மகரிஷி வழங்கிய சிறப்பு தவங்களே என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதுபற்றிய தகவல் வேண்டுமெனில் அதையும் கட்டுரையாக வழங்கக் கடமைப்பட்டுள்ளேன் நன்றி. இப்போது கட்டுரைக்கு வருவோம்.
இன்று கத்தாரில் வழக்கமாகச் செல்லும் பல்பொருள் அங்காடியின் வெளியே ஒரு பூக்கடையில் நின்று ஒவ்வொரு பூக்களாக பார்த்தபோது அதன் விலைகளைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஒரு வேளை தவறோ என்று நினைத்து அங்கே பணிபுரியும் ஒரு ஈழத் தமிழரிடம் கேட்டேன். அவர் அந்த விலை சரியே என்று உறுதிப்படுத்தினார்.
அதாவது நம் ஊர் காசுக்கு 48,525 ரூபாய். என்ன இப்படி சொல்றீங்க என்றால், அடுத்து ஒரு பூக்குடுவையைக் காண்பித்தார். அதன் விலை இன்னும் தலை சுற்றியது. நம்ம ஊர் காசுக்கு 1,16,269 ரூபாய். இது எல்லாம் வாங்குவார்களா என்று அப்பாவித்தனமாகத்தான் கேட்டேன். அடிக்கடி இங்கே அரபிகள் வாங்குவார்களாம். இது ஹாலந்தில் இருந்து வருகிறதாம். ஒரு வருடம் இந்த பூக்கள் வாடாதாம். அதுலாம் சரி இந்த விலைக்கு தோட்டமே வாங்கலாமே என்று அப்படியே நகர்ந்துவிட்டேன்.....
ஆத்தாடி ஆத்தா....
செ. இராசா
(அடுத்த பதிவு முகநூலில் சில தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்)

No comments:
Post a Comment