09/03/2019

கற்றது கையளவு (ISLAND- ISLET)




நேற்று பிள்ளைகளோடு கடற்கரை போயிருந்தபோது, சுற்றிலும் நீருள்ள ஒரு சிறு மணல்திட்டில் என் பையன் நின்றான். அப்போது சில படங்களை என் கைபேசியில் எடுத்தேன். அதை என் மனைவியிடம் காண்பிக்கும்போது ஐலேண்ட் (ISLAND) என்று சொன்னேன். அப்போது என் பையன் அதை ஐலேண்ட் (ISLAND) என்று சொல்லக்கூடாது, ஐலெட் (ISLET) என்று சொல்ல வேண்டும் என்றான். நான் இதுவரையில் கேள்விப்படாத வார்த்தை அது.
அகராதியில் தேடியபோதும் அப்படியே இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இந்த வித்தியாசங்கள் தெரிவது ஆச்சர்யமான விடயமாகவே உணர்கின்றேன். இருந்தாலும் அவ்வார்த்தை நமக்குத் தெரியாததை நான் ஒரு பெரிய விடயமாக நினைக்கவில்லை.

காரணம், இந்த ஆங்கிலம் போல் மிகவும் வித்தியாசமான மொழி உலகில் வேறு இல்லை என்றே சொல்வேன், இதை ஒரு மனப்பாட மொழி என்றே நான் அழைப்பேன். உதாரணமாக, ISLAND என்பதை “ஐஸ்லேண்ட் “ என்று தான் அழைக்கவேண்டும், ஆனால் அப்படி அழைக்கக் கூடாது. காரணம் “எஸ்” S இங்கே சைலன்ட் என்பார்கள்.

நான் கேட்கிறேன், தமிழில் "அம்மாமி" என்று எழுதிவிட்டு இதை வாசியுங்கள் என்றால் எப்படி வாசிப்பீர்கள் "அம்மாமி" என்று தானே. இல்லை..இல்லை "அம்மா" என்பதே சரி "மி" சைலன்ட் என்று சொன்னால் எப்படி இருக்கும். இப்படித்தான் ஆங்கிலத்தில் நிறைய வார்த்தைகள் உள்ளது. (இது இலங்கை ஜெயராஜ் ஐயா சொன்ன உதாரணம்)

ஆகவே உறவுகளே, இதன் மூலம் அடியேன் சொல்லவருவது என்னவென்றால், ஆங்கிலம் என்ற மனப்பாட மொழியை மிகவும் உயர்வாக எண்ணாமல், அது வெறும் பிழைப்புக்கான மொழியாகக் கையாண்டால் போதும் என்று சொல்லிக்கொண்டு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
 நன்றி வணக்கம்.

(அப்புறம் படம் எப்படி இருக்குன்னு சொல்லீடுங்க...😊😊😊)

✍️செ. இராசா

1 comment:

வேல்கவி.பெ said...

நம் தமிழ்மொழியின் சிறப்பை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து உள்வாங்கினான்என்றால் நம் மொழியின் மேன்மையும் அதன் மொழிநடையும் ஆதித்தமிழன் எதற்காக உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் என்று பிரித்துள்ளான் என்று உண்மைபுரியவரும்.

சிறப்பான உரைநடை விளக்கம் உங்கள் வாழ்வியல் நிகழ்விலிருந்து பதிந்துள்ளது நம் தாய் தமிழ்மொழியின் சிறப்பை பதிவிட்டுள்ளது எழுச்சி கவிஞரே!