02/03/2019

மரபு (வெண்பா_2)-புது-நவீன-ஹைக்கூ---கவிதை



ந்த படத்தைப் பார்த்தபோது எனக்குள் தோன்றிய எண்ணங்களை இங்கே சில வடிவங்களில் தருகின்றேன்.

மரபுக் கவிதை (வெண்பா)
**************************
நெஞ்சம் முழுதும் நிறைந்துள்ள தம்பியைக்
கெஞ்சியே அன்புடன் கேட்கின்றேன்- சஞ்சீவா
அஞ்சா மனதில் அடிவைக்க என்றுமே
நெஞ்சில் (*நஞ்சாம்) மதுவினை நீக்கு!

புதுக்கவிதை
*************
கண்ணில் ஒருமுறை வந்தாலே
காற்றாய் நானும் பறக்கின்றேன்....

உன்னை ஒருமுறை நினைந்தாலே
உலகை நானும் மறக்கின்றேன்...

உன்னில் தஞ்சம் அடைந்திடவே
உண்மையில் நானும் வாழ்கின்றேன்...

எந்தன் நெஞ்சை அறிந்தவனே
என்னை ஏற்றுக் கொள்வாயா?- இல்லை
என்னை இன்றே கொல்வாயா?!!

நவீனக் கவிதை
*********************
நீ இமைக்கும் நொடியிலே
நான் ருசிக்கும் தருணங்களை
சிந்தாமல் சேமிக்கும்போது
தெரிந்து கொண்டேன்...

அது என் இதயத்தை இயக்கும்
எரிபொருளென்று...

ஹைக்கூ
**********
அஞ்சா நெஞ்சமும்
கண்ணீர் வடிக்கிறது
தேர்தல் பரப்புரையில்

No comments: