சிலையைக் கண்டாலும்....
(1)
 கல்லாய் இருந்தது
 கலையாய் நிற்கிறது
 அறிவுத் திறனால்..
 
 (2)
 ஒளிந்த உருவம்
 வெளியே வந்தது
 சிற்பியின் உளியால்
 
 (3)
 கசடை நீக்க நீக்க
 கடவுள் தெரிகிறது
 ஆத்திகப் பார்வையில்
 
 (4)
 சிலையைக் கண்டாலும்
 சிற்பியை மறுக்கிறது
 ஆதாரம் வேண்டி...
 
 ✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment